பிரதமர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், விசாரணைகள் தீவிரம், 3 பேர் கைது..! சம்பவம் நடந்தபோது மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் விசாரணை..
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நேற்று பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.
ஆனால் இந்தச் சம்பவத்தின்போது குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.