தனது தீர்மானத்தை அறிவித்தார் ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ..!
அனைத்துக் கட்சி தலைவர்களின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டின் சமகால நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
அதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.