கடற்படை கப்பல் மற்றும் விமான நிலையம் ஊடாக சொகுசு வாகனங்களில் தப்பிச் செல்வது யார்?
கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் மற்றும் விமான நிலையம் ஊடாக சொகுசு வாகனங்களில் வந்த நபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
இந்த கப்பல்களுக்குள் சிலர் பிரவேசிக்கும் காட்சிகள் அங்கிருந்த நபரொருவரின் கையடக்க தொலைபேசியில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கப்பல்களில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என கூறப்படுகின்றது.
இதேவேளை, அதிசொகுசு வாகனங்கள் கட்டுநாயக்க நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அதில் பயணித்த பிரபலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.