அரசுக்கு எதிரான போராட்டங்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் இணைந்தனர்..!
அரசுக்கு எதிராக கொழும்பில் பொதுமக்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய, தற்போது ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையியில், போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.