தளர்த்தப்பட்டது ஊரடங்கு! கடும் அழுத்தத்தால் பின்வாங்கியது அரசு, ஊரடங்கு உத்தரவை மதிக்காத மக்கள்..
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு 9 மணி தொடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதேவேளை பொலிஸ்மா அதிபர் தன்னிச்சையாக அமுல்ப்படுத்திய ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமானது.
என மனித உரிமைகள் ஆணைக்குழு வன்மையாக கண்டித்திருந்ததுடன், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், சட்டத்தரணிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்
குறித்த ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது. என சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களும் ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் வீதிகளில் ஒன்றுசேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.