பொலிஸார் மற்றும் ஆயுதம் தாங்கிய படையினருக்கு உச்ச அதிகாரம்! பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவோர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போருக்கு எதிராக உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுத படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். இதன்படி அரசுக்கு எதிரான போராட்டங்களில் சில குழுக்கள் உள் நோக்கத்துடன் செயற்பட்டு பொது மக்களை வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சிக்கக்கூடும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.