துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்!!

ஆசிரியர் - Editor II
துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்!!

ஜப்பானில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. குறித்த தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக உலங்குவானூர்தியில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார்.

துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் அவனிடம் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு