ஐனாதிபதி நாடாளுமன்றம் வருகை! நாடாளுமன்றில் அமளி 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்...
நாடாளுமன்றத்திற்கு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று வருகைதந்துள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அமைதியின்மை உருவாகியுள்ளது.
இதனையடுத்து 10 நிமிடங்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில்,
எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.