எரிபொருளுக்கு டோக்கன் வழங்கும் நடைமுறை இன்று வியாபாரமாக மாறியுள்ளது..! டோக்கன் நடைமுறை தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு...
நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டோக்கன் நடைமுறையானது ஜீன் 23ம், 24ம் திகதிகளில் மட்டும் அமுலில் இருக்கும். என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கின்றார்.
இன்று (03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும்,
தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த டோக்கன் முறையானது எமது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க
பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.