பஸ் கட்டணங்களை 30 வீதத்தினால் உயர்த்துவதற்கு தீர்மானம்..! ஆக குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாய்..
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைய பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டும். என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (28) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
எனினும் இந்த கலந்துரையாடலின் போது இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பஸ் கட்டண திருத்தத்திற்கு எதிர்ப்பதாக தெரிவித்து கலந்துரையாடலில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
எனினும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 30 வீதம் அதிகரிப்பதற்கு அதிகாரிகள் சம்மதித்துள்ளதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஏனைய பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி தற்போது 32 ரூபாவாக காணப்படும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.