மின் கட்டணங்கள் அதிகரிப்பு..! தனது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
மின் கட்டணங்கள் அதிகரிப்பு..! தனது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

மின் கட்டணங்களை அதிகரிக்க மின்சாரசபையினால் முன்வைக்கப்பட்டிருந்த யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தமது பரிந்துரையினை வழங்கியிருக்கின்றது. 

இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 2 ரூபா 50 சதத்தாலும் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை 1,100 ரூபாவால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், 

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை 300 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 12 ரூபா 50 சதத்தால் அதிகரிக்க வேண்டுமென 

இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ள போதிலும், 10 ரூபா கட்டணத் திருத்தத்தை மாத்திரமே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு