குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்!!

ஆசிரியர் - Editor II
குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்!!

தமிழ் திரையுலகின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த பூ ராமு 2008 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அதன்பின்னர் நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.

இதற்கிடையே, நடிகர் பூ ராமு உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூ ராமு சிகிச்சை பலனின்றி காலமானார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு