வரலாற்று சாதனை படைத்த டேரில் மிட்செல்!!

ஆசிரியர் - Editor II
வரலாற்று சாதனை படைத்த டேரில் மிட்செல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்று நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் டேரில் மிட்செல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 ஆவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதி ஆரம்பமானது. நாணயசுழல்ச்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாடியது. 

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 329 ஓட்டங்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 109 ஓட்டங்களை பெற்றார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து 360 ஓடு;டங்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

2 ஆவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 326 ஓட்டங்கள் எடுத்தது. இதில் டேரில் மிட்செல் 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 296 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 ஆவது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதமும் 2 ஆவது இன்னிங்சில் அரை சதம் அடித்த டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டேரில் மிட்செல் முதல் டெஸ்ட்டின் 2 ஆவது இன்னிங்சில் சதம். 2 ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ஓட்டங்களும் 2 ஆவது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். 3 ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதமும் 2 ஆவது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் 538 ஓட்டங்கள் எடுத்து டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மார்டின் டோனெல்லி 462 ஓட்டங்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு