SuperTopAds

தாயையும், 10 வயதான மகளையும் கீழே தள்ளி விழுத்தி, தாக்கி நகைகள் கொள்ளை..! தாயும், மகளும் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
தாயையும், 10 வயதான மகளையும் கீழே தள்ளி விழுத்தி, தாக்கி நகைகள் கொள்ளை..! தாயும், மகளும் வைத்தியசாலையில் அனுமதி..

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளை வீதியில் தள்ளி விழுத்திவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் திருகோணமலை உப்புவெளி மாங்காய் ஊற்று பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

மோட்டார் சைக்கிளில் வந்து இனந்தெரியாத இருவரில் ஒருவர் தாயும், மகளும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தாயின் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை பறித்து சென்றனர். 

இந்நிலையில் தாயும், மகளும் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கன்னியா மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த எம். சுவிஸ்மா (35 வயது) மற்றும் அவரது மகள் ஹரிஸ்டிகா (10 வயது) ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.