எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு..! ஆதாரங்களை முன்வைத்து அச்சு ஊடகங்கள் ஆரூடம்..
நாட்டில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம். என அச்சு ஊடகங்கள் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டி செய்தி வௌயிட்டுள்ளன.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என அச்சு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கிறது.
92 மற்றும் 95 வகை பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 70 முதல் 80 ரூபாவினாலும், டீசல்
மற்றும் சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 50 முதல் 70 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றன.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட இறுதி விலை அதிகரிப்பின் பிரகாரம் 92 லீற்றர் எரிபொருளின் விலை
தற்போது லீற்றர் ஒன்றின் விலை 420 ரூபாவாகும்.தற்போது நாட்டில் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும்,
டீசல் லீற்றர் 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 445 ரூபாவாகவும் உள்ளது. புதிய எரிபொருள் விலை சூத்திரத்தின்படி,
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை விலையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன்
இறுதியாக இந்த விலை சூத்திரம் மே 24 அன்று நடைமுறைக்கு வந்தது.