மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் மீதான தடையை நீடித்த நீதிமன்றம்!
பொதுமக்களின் மின் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான வேலை நிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜீலை 6 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (22) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை ஜூலை 6ஆம் தேதி தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.