இந்தியாவின் மிக முக்கிய பொருளாதார நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது..!
இந்தியாவின் மிக முக்கிய நிபுணர்கள் குழு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க கூறியிருக்கின்றார்.
எதிர்கால கடன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் வருகை தரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய விஷேட உரையின்போது இதனை தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பணியாளர் நிலை ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.