பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும்..! கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த அறிவிப்பு..
நிறைவு செய்யப்படாமலிருக்கும் பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு டிசம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தவணை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் இருந்த நிலமையில் இருந்து இன்றைய நிலமை வேறுபட்டுள்ளது.
ஆரம்ப தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கூடுதல் பாடசாலை நாள்கள் இருக்கும்.
உயர்தர மாணவர்களுக்கு செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூடுதல் கற்றல் நடவடிக்கைகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.
வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என்றும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.