சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! தினசரி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார அமைச்சர் அறிவிப்பு..
நாடு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 ஆம் திகதி முதல் வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவவித்துள்ளார்.
அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு 9 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்திற்கு 6 நிரப்பு நிலையங்களும் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், டீசல் மற்றும் பெட்ரோல் பற்றாக்குறையால் பல நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பல நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகள் காத்திருக்கின்றனர்.