SuperTopAds

வங்கி ATM இயந்திரங்களில் பணம் எடுப்போரை இலக்குவைத்து தொடர் வழிப்பறி..! பெண்கள் உஷார்..

ஆசிரியர் - Editor I
வங்கி ATM இயந்திரங்களில் பணம் எடுப்போரை இலக்குவைத்து தொடர் வழிப்பறி..! பெண்கள் உஷார்..

நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

விசேடமாக கொழும்பு - வெள்ளவத்தைப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏ.ரி.எம். இல் பணம் எடுப்போரைக் குறிவைத்தும் 

தனியாக செல்லும் பெண்களை மிரட்டியும் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மோட்டார் சைக்கிளில் வரும் குழுவினர் இவ்வாறு ஏ.ரி.எம். இல் பணம் எடுப்போரைக் குறிவைத்து பணம் பறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று 20 ஆம் திகதி காலை வெள்ளவத்தை கடற்கரை வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த யுவதி ஒருவர் 

அதனை நிறுத்தி விட்டு அருகில் இருந்த ஏ.ரி.எம்.இல் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பிய சமயம் 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்த இருவர் அவரிடம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த யுவதி வைத்தியசாலை செலவுகளுக்காக ரூபா 15,000வை வங்கியில் இருந்து எடுத்த சமயமே அவரிடமிருந்து பணமும் ஏ.ரி.எம். அட்டையையும் பறித்துக் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற சமயம் அவ் இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்த போதிலும் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

அதேவேளை எவரும் உதவ முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது எனவே தனியாக சென்று வங்கிகளில் பணம் எடுப்பவர்கள் 

மற்றும் தங்கச் சங்கிலிகள் அணிந்து கொண்டு வீதியில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

மேலும் கூடுமான வரை பொருட்கள் கொள்வனவு களில் ஈடுபடும் போது வங்கி பணப்பரிவர்தனை அட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 

தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.