மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல்!! -இரு நாள் நிகழ்ச்சிகள் ரத்து-

ஆசிரியர் - Editor II
மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல்!! -இரு நாள் நிகழ்ச்சிகள் ரத்து-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், வைத்தியர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு