SuperTopAds

திருட்டு தனமாக எரிபொருள் வியாபாரம்..! எரிபொருள் விநியோக பவுசர்களுக்கு நடந்த தரமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திருட்டு தனமாக எரிபொருள் வியாபாரம்..! எரிபொருள் விநியோக பவுசர்களுக்கு நடந்த தரமான சம்பவம்..

உடன் அமுலுக்கு வரும்வகையில் 3 எரிபொருள் விநியோக பவுசர்களின் அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து 

சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர 

ருவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.