தமிழகத்திலிருந்து 60 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சாமி சிலைகள்!! -அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு-

ஆசிரியர் - Editor II
தமிழகத்திலிருந்து 60 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சாமி சிலைகள்!! -அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு-

இந்திய தமிழகத்தின் கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.

திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்திலும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு