SuperTopAds

அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் பெரும் அவதி!! -உக்ரைனில் தொடரும் அவலம்-

ஆசிரியர் - Editor II
அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் பெரும் அவதி!! -உக்ரைனில் தொடரும் அவலம்-

உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரான செவெரோடோனெட்ஸ் நகரில் மக்கள் அத்தியாவசிய பொருட்களின்றி பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி அந்த நகரில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

சுமார் 12,000 பொதுமக்கள் இவ்வாறு சிக்கியுள்ள நிலையில், ரஷ்யா தொடர்ந்தும் தமது இலக்குகளை நோக்கித் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் முதல் ரஷ்யா செவெரோடோனெட்ஸ் நகரை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நகரில் இருந்து வெளியேறுவதற்கான முக்கிய பாலங்களை ரஷ்யா தகர்த்துள்ளது.

இதனால் அங்கு சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, யுக்ரைன் இராணுவத்தினர் போரை கைவிட்டு, தம்மிடம் சரணடைந்தால் மனிதாபிமான வழிதடத்தை திறப்பதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.