படப்பிடிப்பின் போது திடீர் நெஞ்சு வலி!! -துடிதுடித்த தீபிகா படுகோனே வைத்தியசாலையில்-

ஆசிரியர் - Editor II
படப்பிடிப்பின் போது திடீர் நெஞ்சு வலி!! -துடிதுடித்த தீபிகா படுகோனே வைத்தியசாலையில்-

படப்பிடிப்பின் போது நெஞ்சு வலியால் துடிதுடித்த நடிகை தீபிகா படுகோனே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தற்போது நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு படபடப்பும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நலம் தேறி உள்ளது.

அதன்பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய தீபிகா படுகோனே அங்குள்ள நோவேட்டல் ஹோட்டலில் வைத்தியர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார் என அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு