திடீரென உயிரிழந்த ரசிகர்!! -வீடு தேடிச் சென்ற ஜெயம் ரவி-

ஆசிரியர் - Editor II
திடீரென உயிரிழந்த ரசிகர்!! -வீடு தேடிச் சென்ற ஜெயம் ரவி-

ஜெயம் ரவியின் ரசிகரான செந்தில் திடீரென மரணமடைந்த நிலையில் அவரின் சொந்த ஊருக்கு சென்று ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை பிடித்தவர். ஜெயம் ரவியின் தீவிர ரசிகரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திடீரென மரணமடைந்தார். 

இந்த செய்தியை அறிந்த நடிகர் ஜெயம் ரவி, உடனடியாக அவரது சொந்த ஊருக்கு சென்று செந்திலின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செந்திலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயம் ரவி, அவரின் உடன்பிறந்தவர்களுக்கான படிப்புச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த செயலால் சமூக வலைதளங்களில் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு