அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

மன்னார் - நொச்சிக்குளம் கிராமத்தில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யபட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழ (10) நொச்சிக்குளத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இசம்பவம் தொடர்பில்  நொச்சிக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர்  பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி எம்.ரூபன்ராஜ்  முன்னிலையாகி இருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை பதில் நீதவான் எதிர்வரும் (24) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு