நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்!! -ஒரு இலட்சம் பேருக்கு கல்யாண விருந்து-

ஆசிரியர் - Editor II
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்!! -ஒரு இலட்சம் பேருக்கு கல்யாண விருந்து-

லேடிசூப்பஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இவர்களது திருணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு விருந்து வழங்கி வைத்துள்ளனர். 

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். 

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு இலட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. 

ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கல்யாண விருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு