ஜுன் 9இல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வரும் முக்கிய காதல் ஜோடி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் எதிர்வரும் ஜுன் 9 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான திருமணப் பத்திரிகையும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்துள்ள சுற்றுலா நகரமான மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளார்களாம் என்று மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.