12 நாட்களில் 100 கோடி!! -வசூல் சாதனை படைத்த 'டான்' திரைப்படம்-

ஆசிரியர் - Editor II
12 நாட்களில் 100 கோடி!! -வசூல் சாதனை படைத்த 'டான்' திரைப்படம்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம்  13 ஆம் திகதி வெளியான டான் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் சாதணை படைத்துள்ளது. 

டான் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபா வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு