படப்பிடிப்பின் போது ஆற்றில் விழுந்த கார்!! -சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-

ஆசிரியர் - Editor II
படப்பிடிப்பின் போது ஆற்றில் விழுந்த கார்!! -சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-

குஷி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியின் போது திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு