படுக்கையறை காட்சி தொடர்பில் கேள்வி!! -கடுப்பான மாளவிகா மோகனன்-

ஆசிரியர் - Editor II
படுக்கையறை காட்சி தொடர்பில் கேள்வி!! -கடுப்பான மாளவிகா மோகனன்-

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனு{டன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். 

அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு