SuperTopAds

எடை குறைக்க அறுவை சிகிச்சை!! -நடிகை திடீர் மரணம்-

ஆசிரியர் - Editor II
எடை குறைக்க அறுவை சிகிச்சை!! -நடிகை திடீர் மரணம்-

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் 22 வயதான சேத்தனா ராஜ் என்பவர் ரி.வி நாடகங்களிலும், சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 

அன்று மாலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சிகிச்சை செய்த வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால், வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.