இமானுக்கு இரண்டாவது திருமணம்!!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இமானுக்கும், மோனிகா என்பவருக்கும் 2008 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
அதன்பின் இமான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று இமான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கலை இயக்குனர் உபால்டுவின் மகள் அமலியை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்தார். இரு வீட்டாரது சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.