கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி பொருட்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி கட்சிகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 5 ஆம்  நாளினை நினைவுகூறும் முகமாக  முள்ளிவாய்க்கால் கஞ்சியை  நினைவுகூறும் நிகழ்வொன்று  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர பகுதியில் திங்கட்கிழமை(16)  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.இதேவேளைஇ புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .அத்துடன் இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி பொருட்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

மேலும் இந்நிகழ்வு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையேற்று நடத்தியதுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன், பா.அரியநேந்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ,உட்பட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராசா சரவணபவன் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான வடிவேல்கரசு சந்திரன்,  பொன் செல்வநாயகம் ,சிவலிங்கம் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சிவஞானம் ஜெயகுமார்,இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன்  ஆலையடிவேம்பு தமிழரசுக்கட்சியின் தலைவர் ஜெகநாதன், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன்   முள்ளிவாய்க்கால் கஞ்சி  காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு