SuperTopAds

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(15) மாலை பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை  தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இந்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தானம் வழங்கினர்.

இதன் போது அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன ,அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ,ஆகியோர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை  கௌரவித்ததுடன்  வீதியில் சென்ற பொது மக்களுக்கு பிஸ்கட் மற்றும் தேனீர் குளிர்பானம்  என்பனவற்றை  தானமாக வழங்கி வைத்தனர்.

இதே வேளை    களுவாஞ்சிகுடி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையம்  என்பனவும்  வெசாக் தின நிகழ்வினை முன்னிட்டு  பல  ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஏராளமான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள்  பொலிஸ் நிலையங்கள் வைத்தியசாலைகளிலும் வெசாக் வெளிச்ச கூடுகள் பரவலாக காட்சி படுத்தப்பட்டிருந்தன.

சுமார் இரண்டு வருடங்கள் கொரோனா  அனர்த்தத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இவ்வாறான நிகழ்வுகளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் பொதுமக்கள கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.