மர்மமாக இறந்த நடிகை!! -படுக்கை அறையில் போதை பொருட்கள்: கணவர் கைது-

ஆசிரியர் - Editor II
மர்மமாக இறந்த நடிகை!! -படுக்கை அறையில் போதை பொருட்கள்: கணவர் கைது-

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 20 வயதான மொடல் அழகியான சகானா மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த வருடம் அவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

சகானா நடிக்க வந்த பின் கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கி இருந்தார். நேற்று காலை இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு சென்றறு பார்த்த போது சகானா அவரது கணவரின் மடியில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சகானாவின் உறவினர்களும் தகவல் அறிந்து அங்கு சென்ற நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் சகானாவை கொலை செய்திருக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே அங்கு வந்த பொலிஸார் சகானாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகானாவின் படுக்கை அறையை சோதனை செய்த போது கஞ்சா மற்றும் சில போதை பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சகானாவின் கணவர் சஜாத்தை பொலிஸார் கைது செய்தனர். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio