ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி காலமானார்!!

ஆசிரியர் - Editor II
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி காலமானார்!!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73 ஆவது வயதில் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி ஊடகப் பரிவு தகவல் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்காக ஐக்கிய அரபு இராச்சியம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio