அணியில் இருந்து தூக்கப்படும் விராட் கோலி!!

ஆசிரியர் - Editor II
அணியில் இருந்து தூக்கப்படும் விராட் கோலி!!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி எதிர்வரும் யூன் மாதம் 9 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் ரி-20 தொடர் முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5  ரி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை இப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ரி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்  முன்னாள் அணித்தலைவர் விராட் கோலிக்கு  ஓய்வு அளிக்கப்படலாம்  என  தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio