6 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய 4 விண்வெளிவீரர்கள்!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களாக பணியாற்றி வந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலமானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நான்கு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது.
அமெரிக்க நாசா விண்வெளிவீரர்களான தோமஸ் மார்ஷ்பேர்ன், ராஜா சாரி, கேலா பாரொன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தைச் சேர்ந்த ஜேர்மனிய விண்வெளி வீரரான மத்தியஸ் மோரர் சகிதம் குறித்த விணகலம் அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலில் நேற்று வெள்ளிக்கிழமை ,றங்கியுள்ளது.
அந்த விண்வெளிவீரர்கள் நால்வரும் எமது பூமிக்கு மேலாக 250 மைல் தொலைவில் வலம் வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 177 நாட்களைக் கழித்திருந்தனர். ,ந்நிலையில் அந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு சரியாக 24 மணி நேரம் கழித்து பூமியை வந்தடைந்துள்ளனர்.