மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர்!! -21 வருடங்களாக நடந்த சம்பவம்-
தாய்லாந்தில் வசிக்கும் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த மனைவியின் உடலை தனது வீட்டில் சவப்பெட்டியில் 21 வருடங்களாக வைத்திருந்து தகனம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சான் சன்வச்சரகர்ன் என்ற வயோதிபர் 2001 ஆம் ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை தலைநகரம் பேங்கொக்கிலுள்ள பேங் கென் மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வயோதிபரான சான் சன்வச்சரகர்ன் தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்யாமல் மரணித்துவிடுவார் என்று கவலைப்பட்டதாலேயே இத்தகைய செயலை செய்துள்ளார்.
அதனையடுத்து, பெட்ச்காசெம் க்ருங்தெப் என்ற ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் அவரது சடலத்தை தகனம் செய்ய முடிவு செய்தார். தகனம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளில் அறக்கட்டளை அவருக்கு உதவியது.
உயர் இரத்த அழுத்தத்தால் அவரது மனைவி உயிரிழந்ததாகவும், மேலும் அவரது உடலை புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக நோந்தபுரியில் உள்ள வாட் சோன்பிரதர்ன் ரங்சரித்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இருப்பினும், அவர் அவரது உடலை தகனம் செய்யாமல் எடுத்து வந்து சவப்பெட்டியில் வைத்திருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.