SuperTopAds

ஒரு வருடத்தில் பிரச்சினையை தீர்க்கலாம் என கூறுவதற்கு நான் பைத்தியக்காரன் அல்ல..! 2 வருடங்களுக்கும் மேல் கால அவகாசம் தேவை, கை விரித்தார் நிதி அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
ஒரு வருடத்தில் பிரச்சினையை தீர்க்கலாம் என கூறுவதற்கு நான் பைத்தியக்காரன் அல்ல..! 2 வருடங்களுக்கும் மேல் கால அவகாசம் தேவை, கை விரித்தார் நிதி அமைச்சர்..

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும் என கூறுவதானால் நான் பைத்தியக்காரன் என கூறியிருக்கும் நிதி அமைச்சர் அலிசப்ரி, முற்றாக பிரச்சினையை தீர்ப்பதற்கு 2 வருடங்களுக்கும் அதிகமான காலம் எடுக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 2 வருடங்களில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா? அல்லது 5 முதல் 10 வருடங்கள் வரை இழுத்தடிப்பதா? என்பது தொடர்பில் நாம் அனைவரினதும் கையில்தான் உள்ளது.

மேலும், இலங்கையின் தற்போதைய வௌிநாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட இல்லை.வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.