நிர்வாணமாக நடிக்க வர்புறுத்தினார்கள்!! -இதனால் 15 நிமிடங்கள் நடித்தேன் என்கிறார் ஆண்ட்ரியா-
வெளியாக உள்ள பிசாசு 2 படத்தில், 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வற்புறுத்தினார்கள் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப் படத்தின் முன்னோட்டம், நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 'கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்தனர்' என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
'பிசாசு 2 கதையில், 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றனர். இதனால் நடிக்க மறுத்தேன். நான் மறுத்த போதும், என்னை கட்டாயப்படுத்தினர். பின்னர், கதை தரமானதாக இருந்ததால், அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்' என, ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
ஏற்னவே, வடசென்னை படத்தில் படகில் எடுக்கப்பட்ட காட்சியில், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்; பின், அந்த காட்சி நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.