ரயில் நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்!! -வெளிநாட்டு ஆயுத உதவிகளை தடுக்கும் புதிய யுத்தி-
உக்ரைந் நாட்டிற்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக ரயில் சேவைகளை இயக்கும் 6 உப மின் நிலையங்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இராணுவ உதவிகளை தடுப்பதற்காக ரஷ்யா நடத்தியுள்ள இத்தாக்குதல்களில் மத்திய உக்ரைனில் 5 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, உக்ரைனின் சில பகுதிகளை மிருகதனமாக நடத்த ரஷ்யா முயற்சிக்கின்ற போதிலும் அதன் போர் நோக்கங்களில் தோல்வியடைந்து வருவதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கியை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்யா, இராணுவ ரீதியாக வலுவிழந்து இருப்பதை அமெரிக்கா பார்க்க விரும்புவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் இதன்போது தெரிவித்துள்ளார்.