SuperTopAds

ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்!! -க்ரைன் படைகளுக்கு ரஷ்யா கொடுத்துள்ள காலக்கேடு-

ஆசிரியர் - Editor II
ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்!! -க்ரைன் படைகளுக்கு ரஷ்யா கொடுத்துள்ள காலக்கேடு-

மரியுபோலில் உள்ள உக்ரைன் இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தநிலையில் அந்த நாட்டு நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் ஒரு மணி வரை உக்ரைன் இராணுவத்தினர் ஆயுதங்களை கைவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆயுதங்களை கைவிடும் இராணுவத்தினர் ஜெனீவா உடன்படிக்கைக்கு அமைய போர் கைதிகளாக கருதப்படுவர். இதேவேளை மரியுபோலில் உள்ள இராணுவத்தினரை அகற்றும் நடவடிக்கை, அமைதி பேச்சுவார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மரியுபோலை மூடுவதற்கு ரஷ்யா திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஏவுகனை தாக்குதல்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு கிவ் நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.