SuperTopAds

தேநீருடன் காலை உணவு வழங்காததால் கோபம்!! -மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமன்-

ஆசிரியர் - Editor II
தேநீருடன் காலை உணவு வழங்காததால் கோபம்!! -மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமன்-

சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் துப்பாக்கி குண்டு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் 76 வயதான காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் என்பவருக்கு 42 வயது மருமகள் நேற்று காலை தேநீர் வழங்கியதாக கூறப்படுகின்றது. அப்போது, அதனுடன் காலை உணவும் வழங்காததால் காஷிநாத் ஆத்திரமடைந்துள்ளார். இதில் காஷிநாத்துக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கோபத்தில் காஷிநாத் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு மருமகள் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.