SuperTopAds

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்கள்!! -ஆராய சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நாட நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்கள்!! -ஆராய சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நாட நடவடிக்கை-

உக்ரைனில் நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஆராய்வதற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு 2.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ,ணைந்து மேற்படித் தொகையினை வழங்க முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது. ரஷ்ய படைகள் உக்ரைனில் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதால் அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல பெறுமதி மிக்க கட்டடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ரஷ்ய ,ராணுவம் சில ,டங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ,வ்வாறான சூழலில், நீதிமன்றத்தின் ஊடாகவே, குற்றவாளிகளுக்கான தண்டனையை உரிய முறையில் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.