SuperTopAds

இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான் எக்ஸ்.இ வைரஸ்!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான் எக்ஸ்.இ வைரஸ்!!

உயிர் கொல்லி ஒமைக்ரான் வைரஸ் வகையின் பிறழ்வு அடைந்த எக்ஸ்.இ வகை கொரோனா இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 

ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்பட்ட குறித்த எக்ஸ்.இ வகை கொரோனா, இந்தியாவிலும் ஒருவருக்கு பரவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனாவும், எக்ஸ்எம் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாக ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுபற்றிய கூடுதல் தரவுகள் எதையும் தெரிவிக்கவில்லை. புதியவகை கொரோனா பாதித்த இருவரின் உடல் நிலை குறித்தும் அதிகாரிகள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

முன்னதாக இந்த வார துவக்கத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மும்பை நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும், இதை நிராகரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு புதிய வகை கொரோனா பாதிப்புதான் இது என வரையறுக்க முடியாது எனக்கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.