SuperTopAds

கள்ளக்காதலுக்கு இடையூறு!! -விஷம் கொடுத்து ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்-

ஆசிரியர் - Editor II
கள்ளக்காதலுக்கு இடையூறு!! -விஷம் கொடுத்து ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்-

இந்தியாவியில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு சஞ்சனா (வயது 4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் கணவர் வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி குழந்தைகளுடன் இருந்தார். மாலையில் மகன் சரணுக்கு உடல்நிலை சரியில்லை என்று கணவருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்கு விரைந்த கணவர் மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை அங்கு உள்ள தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

எனவே குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தினர். 

அப்போது அவர்களின் வீட்டில் விஷப்பொடி பாக்கெட்டுகள் கிடந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் சாவில் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

இதற்கிடையில் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தை சஞ்சனாவும் மயங்கி விழுந்தது. உடனே அவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அந்தக் குழந்தையும் விஷம் சாப்பிட்டு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தாயிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். குறித்த தாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.