SuperTopAds

கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் ஆகக் கூடிய புள்ளி 178 ஐ பெற்ற மாணவி ஜாபீர் ஜின்னா சுமையா கௌரவிப்பு

ஆசிரியர் - Editor III
கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் ஆகக் கூடிய புள்ளி 178 ஐ பெற்ற மாணவி ஜாபீர் ஜின்னா சுமையா கௌரவிப்பு

மருதமுனை அல் மதீனா வித்தியாலய  புலமையாளர்கள் கௌரவிப்பும் சேவைநலன் பாராட்டு விழாவும்

கல்முனை கல்வி வலய   கமு/கமு/மருதமுனை அல் மதீனா  வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும்   ஆசிரியைகளையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.குனுகதுல்லாஹ் தலைமையில் இன்று பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான எம்.எஸ்.எம் நவாஸ் கலந்து கொண்டு புலமையாளர்களை பாராட்டி கௌரவித்தார்.நிகழ்வின் முதலில் கிறாஅத் ஓதப்பட்டு தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் என்பன பாடப்பட்டன.

தொடர்ந்து தலைமை உரை மற்றும் வரவேற்புரையினை பாடசாலை அதிபர் மேற்கொண்டார்.தொடர்ந்து பிரதம விருந்தினரின் உரை இடம்பெற்றது.அதனை அடுத்து பரிசளிப்பு கௌரவிப்பு என நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது. இதன் போது பிரதி அதிபர், உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ,பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள்,  புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கல்முனை முஸ்லீம் கோட்டப் பாடசாலைகளில் ஆகக் கூடுதலான புள்ளியான 178 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ஜாபீர் ஜின்னா சுமையா என்ற மாணவி உள்ளிட்ட 12   மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களும் அதிதிகளால்  கெளரவிக்கப்பட்டனர்.